Chevrolet Spark Muzic கார் அறிமுகம்

Chevrolet Spark Muzic என்று தனது புதிய கார் ரகத்தை செவ்ரோலேட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகபடுத்தியது.இதன் விலை 3.68 லட்சம்(showroom விலை).இந்த கார் ரகத்தை குறிப்பாக இசை பிரியர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது செவ்ரோலேட்.இசையை இதில் 2DIN and six-CD changer முறையில் கேட்கலாம்.‘Muzic edition’ என்று புதிய இசை வடிவத்தில் இசையை கேட்கலாம் என்பது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் ஆனால் இதன் பெட்ரோல் பயன்பாடு வைத்துதான் இதன் எதிர்காலம் இருக்கும்.

sparkmuzic

sparkmuzic2

sparkmuzic3

தமிழ்

Advertisements

OSCAR(உலக அரங்கில் தமிழ் (எல்லா புகழும் இறைவனுக்கே)…
arr

BAFTA

GOLDEN GLOBE

இதயபூர்வமான வாழ்த்துக்களுடன்
தமிழ்

மகாசிவராத்திரி விழா ஈஷா யோகா மையம் ,கோயம்புத்தூர்

isha-mahashivarathri-09-352-4161

வருடம் தோறும் மகாசிவராத்திரி விழா ஈஷா யோகா மையத்தில் வெகு சிறப்பாக நடைபெறும்,இந்த வருடம் மகாசிவராத்திரி febrauary 23 இரவு சிறப்பாக நடைபெற உள்ளது.இந்த நாளில் யோகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து சதகர்களும் இரவு முழுவதும் கண் விழித்து சத்குருவுடன் தியானத்தில் ஈடுபடுவது எல்லோருக்கும் வித்தியாசமான அனுபவமாக பயனுள்ளதாக அமையும்.

http://www.ishafoundation.org/Mahashivarathri/Mahashivarathri_Live.php#
(இந்த முகவரியில் சென்று மற்ற நிகழ்ச்சிகளை பற்றிய தகவல்களை பெறலாம்)

http://spreadsheets.google.com/pub?key=pgeVXmVtw3rNxG1CbPtEVIg
(உங்கள் ஊரிலும் ஈஷா மகாசிவராத்திரி நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள்.)

தமிழ்

நான் கடவுள் திரைப்படம் வெளியானதிலிருந்து அகோரிகள் என்ற வார்த்தை தமிழகத்தில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது,அவர்கள் யார், அவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றி “Living with himalayan masters” என்ற புத்தகம் மூலம் அறியலாம்.கீழே கொடுத்துள்ள வீடியோ காட்சி அவர்களை பற்றி கொஞ்சம் எடுத்துரைக்கும்

தமிழ்

original_kamal-hassan_47f22602178b4

காடுவாழ் மந்திக்கும் எனது மரபணுவிற்கும்
கதிரளவாம் வித்தியாசம் மூன்று விழுக்காடுதானாம்

மரமேறும் குரங்கின்று வேறுபட்டுருமாறி
மறம்பேணும் குரங்கன்றி வேறென்னவாயிற்று?

மயிரோடுகூடவே நுண் உணர்வை உதிர்த்துவிட்டு
தலைசீவத் தொடுகின்ற குரங்கானோம் வேறென்ன?

மரத்திலே தூங்கையில் வீழ்கின்ற பயம் இன்னும்
பழங்கனவாய் வருகிறது மரபணுவில் பதிவுற்று

மார்தட்டும் மந்திகளின் இயல்பான செய்கையைத்தான்
நான் என்ற சொல்லாலே இயம்புகிறோம் பணிவாக

பேசக்கற்றதினால் நுட்பம் செய்வித்தோம்
பேசக்கற்றதினால் பின்தங்கி நிற்கின்றோம்.

மொழியெனும் அருங்கலம் உணர்வெனும் வழிதவறி
தரைதட்டி நிற்கிறது சிந்தனைக் கடற்கரையில்

கரையோரக் காடுகளில் மொழியற்ற மந்திகளின்
ஞான கோஷங்கள் மெலிதாகக் கேட்கிறது.

காடுவாழ் மந்திக்கும் எனது மரபணுவிற்கும்
கதிரளவாம் வித்தியாசம் மூன்று விழுக்காடுதானாம்.

தமிழ்

உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கவும், இதய பாதுகாப்பிற்கும் இசை கேட்பது நல்ல பலனைத் தரும் என்று தெரிய வந்துள்ளது.

இதய நோயாளிகள் தங்களுக்குப் பிடித்தமான இசையை தினமும் சுமார் அரை மணி நேரம் கேட்டால், அவர்களின் மனம் ரிலாக்ஸ் ஆவதுடன் உடல்ரீதியிலான ஆரோக்கியமும் ஏற்படுவதாக லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இசையை ரசிப்பதால் இரத்த நாளங்கள் விரிவடைவதுடன் சுத்தப்படுத்தப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இசை கேட்பதால், இதய பாதிப்பின்றி இருக்கவும், கொழுப்பின் அளவு குறையவும் வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

இசை கேட்கும் சிகிச்சை முறையை அமெரிக்காவில் சில நோயாளிகளுக்கு அளித்து பரிசோதித்ததாகவும், இதனை பிரிட்டன் நிபுணர்கள் வரவேற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இசையைக் கேட்டு ரசிப்பதால் மூளை நரம்புகளில் நைட்ரிக் ஆக்ஸைடு வெளிப்படுவதாகவும், இது இரத்தம் உறைவதைத் தடுப்பதுடன் கொழுப்பு சேர்வதையும் கரைப்பதாகத் தெரிய வந்துள்ளது.

மனித உடலில் இசையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சியின் ஒருபகுதியாக இது அமைந்துள்ளது. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிம்பொனி இசை மனநலத்தை மேம்படுத்தக் கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்

 

kum-nk 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 நான் கடவுள்

 மலைக்கு வண்ணம் அடித்து புதுமை என்று சொல்ல வில்லை,இரண்டு ஹெளிகோப்டேரை காண்பித்து ஜேம்ஸ் பாண்டு படம் என்று சொல்ல வில்லை,நடிகர்களுக்கு கருப்பு கோட் தந்து stylish படம் என்றும் சொல்லவில்லை,அட நாயகன் நான்கு பேரை அடிக்கும் போது ஒளிந்து நின்று பார்க்கும் நாயகிக்கு காதலும் வரவில்லை,இங்கு நடக்கும் கதைக்கு வெளிநாட்டில் டூயட் இல்லைமேலே சொன்ன எதுவும் இல்லை இல்லை இல்லை.பிறகு என்ன தான் இருக்கிறது நான் கடவுளில்!!!!!!!!!!படத்தில்நாம் அன்றாடம் சாலை ஓரங்களில்,டிராபிக் சிக்னல்களில்,கோயில்களில் சந்தித்து பத்து  நிமிடங்களில் மறந்து போகும் பிச்சைகாரர்களையும்,மனநலம் பாதித்தவர்களையும்பற்றிய கதை தான் “நான் கடவுள்”

கதை:

 உங்கள் மகன் உங்களுடன் இருந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று ஜோசியர் சொல்வதை கேட்டு காசிக்கு சென்று தன் மகனை தொலைத்து வருகிறார் தந்தை.பிறகு தன் மகனை காண காசிக்கு சென்று அங்கு தன் மகன் அகோரிகள் என்று சொல்லும் சாமியார்களிடம் வளர்வதை பார்த்து தன்னுடன் அழைத்துவருகிறார் தந்தை.பிறகு இங்கு(மலைகோயில்) மன நலம் பாதித்தவர்களை வைத்து ஒரு கூட்டம் பிழைப்பு நடத்தி வருகிறது,காசியிலிருந்து வரும் ஆர்யா இங்கு வந்து அந்த கூட்டத்தை என்ன செய்கிறார் என்பதுதான் மீதி கதை.

இதுமாதிரி படம் எடுக்க,யோசிக்க பாலாவிற்கு மட்டும் தான் முடியும்,வாழ்கையில் ஏன் பிறந்தோம் இப்படி, என்று தெரியாமல் மன நலம் பாதித்து,பிச்சை எடுத்து அவர்கள் வாழும் வாழ்கையை இதற்குமேல் தமிழ் சினிமாவில் ஏன் உலக சினிமாவில் யாராலும் காட்டிவிட முடியாது.அவர்களை வைத்தே நகைசுவையை கையாண்ட விதம்,முருகனை கல்யாணம் பண்ணிகிரியானு கேட்கும்போது அந்த பெண் தன் இடுப்பில் இருந்து தாலியை எடுத்து காண்பிக்கும்போது,பாலா நீ தான் இயக்குனர்.அந்த இரட்டையர்கள் பேசும்போது திரைஅரங்கு அதிர்கிறது.ஆர்யா கணகச்சிதமாக ருத்ரன் கதாபாத்திரத்தில் பொருந்துகிறார்.பூஜா அம்சவல்லியாகவே வாழ்த்திருக்கிறார்.இந்த படத்திற்கு இசை இசையராஜா,கேட்க வேண்டுமா பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.தன் மகனை அகோரியாக பார்க்கும் காட்சியிலும் சரி,பாடல்களில் ஓம் சிவ ஓம் ,பிச்சைபாத்திரம் பாடல்களிலும் சரி என்னுடைய இசை சாம்ராஜ்யத்தை யாராலும் நெருங்க முடியாது என்று இசையால் உணர்த்திருக்கிறார்.ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் காசியை நம் கண் முன்னே கொண்டுவந்திருக்கிறார்.அந்த கலை கூத்தாடி ஆடும் காட்சியில் காமிராவை கையாண்டவிதம்,தொடர்ந்து வரும் கைதட்டல் உங்களுக்குதான் வில்சன்.இதுமாதிரியெல்லாம் தமிழ் சினிமா எடுக்க முடியுமா என்று பிரமிக்க வைத்திருக்கிறார் பாலா,இதுமாதிரி படம் இயக்கினால் பணம் வருமா,என்று யோசிக்காமல் துணிந்து இந்த காவியத்தை படைத்திருக்கிறார் .அவர் செதுக்க்கிருகும் அம்சவல்லி கதாபாத்திரம் இறுதி 15 நிமிடங்கள் கேட்கும் கேள்விகளுக்கு இந்த உலகத்தில் யாரிடமாவது பதில் இருக்கிறதா????????????????பாலா நீங்கள் இருக்கும் போதே கொஞ்சம் இயக்கம் என்றால் என்ன என்று இங்குள்ளவர்களுக்கு சொல்லி தாருங்கள் இல்லயென்றால் ,சக நடிகரை விரல் ஆட்டி கேலி பேசவும் மற்ற அசிங்கமான செயல்கள் செய்யவும் இந்த அற்புதமான துறையை பயன் படுத்திவிடுவார்கள். விருதிற்கு பூஜா,பாலா,இளையராஜா இடையில் கடும் போட்டி இருக்கும்,உலகத்தில் உள்ள விருதுகள் cannes,goldenglobe,bafta,oscar,என்று விருதுகள் அனைத்தையும் அள்ள இதோ புறப்பட்டுவிட்டது பாலா அண்ட் டீம்.

சுத்தமான தமிழில் சொல்ல வேண்டும் என்றால் “MINDBLOWING  BALA” .

அடுத்த மிரட்டல் எப்போது?????????

 தமிழ்

நான் கடவுள் பாடல் வெளியிட்டு விழா