
ஈஷா:
ஜக்கி வாசுதேவ் எனக்கு ஆனந்த விகடன் மூலம் தான் அறிமுகம்.இஷா யோகாவை பற்றி நிறைய தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது,ஏனென்றால் சமகால சாமியார்கள் நான் தான் கடவுள் என்னிடம் வந்து பாவ மன்னிப்பு கேள்,உன் குறைகளையும்,கவலையையும் என்னிடம் சொல் என்று சொல்லும்போது,”நீ தான் கடவுள் உனக்குள்ளேதான் கடவுள் இருக்கிறார்,உன் மன நலத்தையும்,உடல் நலத்தையும் செம்மையாக வைத்திருந்தாலே நாம் இந்த மண்ணில் சொர்கத்தை உருவாக்க முடியும் என்ற அவரது வார்த்தைகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தன.உனக்குள் கடவுளை தேடி கண்டு பிடிக்காவிட்டால் வேறு எங்கும் கடவுளை நீ காண முடியாது என்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ்.வெறும் ஆறுதலுக்கும் உண்மைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.கடவுளை திருப்தி படுத்தவே நாம் முயல்கிறோம், எதாவது நாம் தவறு செய்தல் கடவுள் தண்டித்து விடுவர் என்ற பயத்தில் தான் நாம் கோயில்களுக்கு செல்கிறோம். விரதம்இருப்பது,மொட்டை போடுவது, உண்டியலில் பணம் போடுவது போன்று கடவுளுக்கு தாஜா வேறு.வளர்ந்த குழந்தைகளாக தான் நாம் இப்போது இருக்கிறோம் தவறு பண்ணிவிட்டு பாவமன்னிப்பு கேக்கவும், உன் குறைகளை, கவலைகளை, கட்டளைகளை அவரிடம் சொல்வதற்கும் கடவுளை அணுகினால் நம்மிடம் எந்த முன்னேற்றமும் ஏற்படாது.உங்களையும் உங்கள் சுற்றத்தையும்,மன நலத்தையும்,உடல் நலத்தையும் செம்மையாக வைத்திருந்தாலே வேறு எந்த கடவுளையும் நீங்கள் தேட வேண்டிய அவசியம் இருக்காது.அதற்கு யோகா மற்றும் தியானம் மூலமாக தான் நாம் எதை அடையாளம்.தினமும் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கினால் போதும்.அது உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை நிகழ்த்தும்.
(தமிழ்)
ஜென் கதைகள்
சகதியான மனம்
டான்சன், எகிடோ இருவரும் புத்த பிட்சுகள். ஒரு நாள் சகதியான தெரு ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.
ஒரு வளைவில் திரும்பும் போது, நாற்சந்தி போன்ற சந்திப்பின் ஒரு புறத்தில் அழகான இளம்பெண் வேலைப் பாடுடன் கூடிய அழகிய பட்டுச் சேலையைக் கட்டிக் கொண்டு அடுத்த பக்கம் போவதற்கு முடியாமல் நின்று கொண்டிருந்தாள்.
“பெண்னே, இங்கே வா!” என்று கூப்பிட்ட டான்சன் அவளைத் தன்னுடைய கையில் அலக்காக தூக்கிக் கொண்டு சேரும், சகதியுமாக இருந்த தெருவின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு கொண்டு போய் சேர்த்தார்.
அன்று இரவு மடத்திற்கு திரும்பும் வரை எகிடோ எதுவும் பேசாமல் வந்தான். அதற்கு மேல் பொருக்க முடியாமல், “நம்மைப் போன்ற புத்த பிட்சுகள் பெண்கள் அருகில் செல்வது கூட தவறு. முக்கியமாக இளமையும், அழகும் வாய்ந்த பெண்கள் பக்கத்தில் செல்லவேக் கூடாது. நீ ஏன் அவளைத் தூக்கி கொண்டு சென்றாய்?” என்றான்.
“நான் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டு விட்டேன்” என்ற டான்சன், “நீ ஏன் இன்னும் சுமந்து கொண்டு இருக்கிறாய்?” என்று திருப்பிக் கேட்டார்.
மௌனம்
ஒரு தத்துவஞானி புத்தரைப் பார்த்து “வார்த்தைகளை உபயோகிக்காமலும், பேசாமலும், உங்களால் உண்மையை கூற முடியுமா?” என்று கேட்டார்.
புத்தர் மவுனமாக இருந்தார்.
தத்துவஞானி புத்தரை நோக்கி, “உங்களுடைய கருனை மிகுந்த அன்பினால் என்னுடைய மாயை தெளிந்து உண்மையான வழியை அறிய முடிந்தது”, என்று வணங்கி நன்றி கூறி விடை பெற்றுச் சென்றார்.
அவர் சென்றபின் புத்தரின் சீடர் ஆனந்தா, “அந்த தத்துவஞானி எப்படி விரைவாக உணர்ந்து கொண்டார்” என்று கேட்டார்.
புத்தர் அதற்கு, “நல்ல குதிரை சாட்டையின் நிழல் பட்டால் கூட ஒடும்”, என்று பதில் அளித்தார்.
ஒரு பல்கலைக் கழக பேராசிரியர் சிறந்த ஸென் துறவியை சந்திந்து அவரிடம் ஞானம் பற்றி தெளிவு பெறுவதற்காக சென்றார். துறவி அமைதியாக தேனீரினை கோப்பையில் ஊற்றிக் கொண்டு இருந்த போது, பேராசிரியர் ஸென் புத்த மதத்தை பற்றியும் தியானம் பற்றியும் தனக்கு தெரிந்ததை பற்றி வலவல வென்று பேசிக் கொண்டிருந்தார். பேராசிரியரின் கோப்பையின் விளிம்பு வரை தேனீர் ஊற்றிக் கொண்டு இருந்த துறவி, நிறுத்தாமல் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருந்தார். கோப்பையில் இருந்து வழியும் தேனீரை கவனித்துக் கொண்டிருந்த பேராசிரியர், ஒரு நிலைக்கு மேல் பொறுக்காமல் “கோப்பை நிறம்பி விட்டது. இதற்கு மேல் அதில் இடம் இல்லை” என்றார். அதற்கு துறவி “நீயும் இந்த கோப்பை போல் தான்”, “நீ எப்போழுது உனது கோப்பையை காலி செய்து இடம் வைக்கிறாயோ, அப்போது தான் உனக்கு ஞானம் பற்றி என்னால் கூற முடியும்” என்றார்.





