Chevrolet Spark Muzic என்று தனது புதிய கார் ரகத்தை செவ்ரோலேட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகபடுத்தியது.இதன் விலை 3.68 லட்சம்(showroom விலை).இந்த கார் ரகத்தை குறிப்பாக இசை பிரியர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது செவ்ரோலேட்.இசையை இதில் 2DIN and six-CD changer முறையில் கேட்கலாம்.‘Muzic edition’ என்று புதிய இசை வடிவத்தில் இசையை கேட்கலாம் என்பது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் ஆனால் இதன் பெட்ரோல் பயன்பாடு வைத்துதான் இதன் எதிர்காலம் இருக்கும்.
வருடம் தோறும் மகாசிவராத்திரி விழா ஈஷா யோகா மையத்தில் வெகு சிறப்பாக நடைபெறும்,இந்த வருடம் மகாசிவராத்திரி febrauary 23 இரவு சிறப்பாக நடைபெற உள்ளது.இந்த நாளில் யோகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து சதகர்களும் இரவு முழுவதும் கண் விழித்து சத்குருவுடன் தியானத்தில் ஈடுபடுவது எல்லோருக்கும் வித்தியாசமான அனுபவமாக பயனுள்ளதாக அமையும்.
http://www.ishafoundation.org/Mahashivarathri/Mahashivarathri_Live.php#
(இந்த முகவரியில் சென்று மற்ற நிகழ்ச்சிகளை பற்றிய தகவல்களை பெறலாம்)
http://spreadsheets.google.com/pub?key=pgeVXmVtw3rNxG1CbPtEVIg
(உங்கள் ஊரிலும் ஈஷா மகாசிவராத்திரி நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள்.)
நான் கடவுள் திரைப்படம் வெளியானதிலிருந்து அகோரிகள் என்ற வார்த்தை தமிழகத்தில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது,அவர்கள் யார், அவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றி “Living with himalayan masters” என்ற புத்தகம் மூலம் அறியலாம்.கீழே கொடுத்துள்ள வீடியோ காட்சி அவர்களை பற்றி கொஞ்சம் எடுத்துரைக்கும்
உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கவும், இதய பாதுகாப்பிற்கும் இசை கேட்பது நல்ல பலனைத் தரும் என்று தெரிய வந்துள்ளது.
இதய நோயாளிகள் தங்களுக்குப் பிடித்தமான இசையை தினமும் சுமார் அரை மணி நேரம் கேட்டால், அவர்களின் மனம் ரிலாக்ஸ் ஆவதுடன் உடல்ரீதியிலான ஆரோக்கியமும் ஏற்படுவதாக லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இசையை ரசிப்பதால் இரத்த நாளங்கள் விரிவடைவதுடன் சுத்தப்படுத்தப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
இசை கேட்பதால், இதய பாதிப்பின்றி இருக்கவும், கொழுப்பின் அளவு குறையவும் வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இசை கேட்கும் சிகிச்சை முறையை அமெரிக்காவில் சில நோயாளிகளுக்கு அளித்து பரிசோதித்ததாகவும், இதனை பிரிட்டன் நிபுணர்கள் வரவேற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இசையைக் கேட்டு ரசிப்பதால் மூளை நரம்புகளில் நைட்ரிக் ஆக்ஸைடு வெளிப்படுவதாகவும், இது இரத்தம் உறைவதைத் தடுப்பதுடன் கொழுப்பு சேர்வதையும் கரைப்பதாகத் தெரிய வந்துள்ளது.
மனித உடலில் இசையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சியின் ஒருபகுதியாக இது அமைந்துள்ளது. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிம்பொனி இசை மனநலத்தை மேம்படுத்தக் கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைக்கு வண்ணம் அடித்து புதுமை என்று சொல்ல வில்லை,இரண்டு ஹெளிகோப்டேரை காண்பித்து ஜேம்ஸ் பாண்டு படம் என்று சொல்ல வில்லை,நடிகர்களுக்கு கருப்பு கோட் தந்து stylish படம் என்றும் சொல்லவில்லை,அட நாயகன் நான்கு பேரை அடிக்கும் போது ஒளிந்து நின்று பார்க்கும் நாயகிக்கு காதலும் வரவில்லை,இங்கு நடக்கும் கதைக்கு வெளிநாட்டில் டூயட் இல்லைமேலே சொன்ன எதுவும் இல்லை இல்லை இல்லை.பிறகு என்ன தான் இருக்கிறது நான் கடவுளில்!!!!!!!!!!படத்தில்நாம் அன்றாடம் சாலை ஓரங்களில்,டிராபிக் சிக்னல்களில்,கோயில்களில் சந்தித்து பத்து நிமிடங்களில் மறந்து போகும் பிச்சைகாரர்களையும்,மனநலம் பாதித்தவர்களையும்பற்றிய கதை தான் “நான் கடவுள்”
கதை:
உங்கள் மகன் உங்களுடன் இருந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று ஜோசியர் சொல்வதை கேட்டு காசிக்கு சென்று தன் மகனை தொலைத்து வருகிறார் தந்தை.பிறகு தன் மகனை காண காசிக்கு சென்று அங்கு தன் மகன் அகோரிகள் என்று சொல்லும் சாமியார்களிடம் வளர்வதை பார்த்து தன்னுடன் அழைத்துவருகிறார் தந்தை.பிறகு இங்கு(மலைகோயில்) மன நலம் பாதித்தவர்களை வைத்து ஒரு கூட்டம் பிழைப்பு நடத்தி வருகிறது,காசியிலிருந்து வரும் ஆர்யா இங்கு வந்து அந்த கூட்டத்தை என்ன செய்கிறார் என்பதுதான் மீதி கதை.
இதுமாதிரி படம் எடுக்க,யோசிக்க பாலாவிற்கு மட்டும் தான் முடியும்,வாழ்கையில் ஏன் பிறந்தோம் இப்படி, என்று தெரியாமல் மன நலம் பாதித்து,பிச்சை எடுத்து அவர்கள் வாழும் வாழ்கையை இதற்குமேல் தமிழ் சினிமாவில் ஏன் உலக சினிமாவில் யாராலும் காட்டிவிட முடியாது.அவர்களை வைத்தே நகைசுவையை கையாண்ட விதம்,முருகனை கல்யாணம் பண்ணிகிரியானு கேட்கும்போது அந்த பெண் தன் இடுப்பில் இருந்து தாலியை எடுத்து காண்பிக்கும்போது,பாலா நீ தான் இயக்குனர்.அந்த இரட்டையர்கள் பேசும்போது திரைஅரங்கு அதிர்கிறது.ஆர்யா கணகச்சிதமாக ருத்ரன் கதாபாத்திரத்தில் பொருந்துகிறார்.பூஜா அம்சவல்லியாகவே வாழ்த்திருக்கிறார்.இந்த படத்திற்கு இசை இசையராஜா,கேட்க வேண்டுமா பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.தன் மகனை அகோரியாக பார்க்கும் காட்சியிலும் சரி,பாடல்களில் ஓம் சிவ ஓம் ,பிச்சைபாத்திரம் பாடல்களிலும் சரி என்னுடைய இசை சாம்ராஜ்யத்தை யாராலும் நெருங்க முடியாது என்று இசையால் உணர்த்திருக்கிறார்.ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் காசியை நம் கண் முன்னே கொண்டுவந்திருக்கிறார்.அந்த கலை கூத்தாடி ஆடும் காட்சியில் காமிராவை கையாண்டவிதம்,தொடர்ந்து வரும் கைதட்டல் உங்களுக்குதான் வில்சன்.இதுமாதிரியெல்லாம் தமிழ் சினிமா எடுக்க முடியுமா என்று பிரமிக்க வைத்திருக்கிறார் பாலா,இதுமாதிரி படம் இயக்கினால் பணம் வருமா,என்று யோசிக்காமல் துணிந்து இந்த காவியத்தை படைத்திருக்கிறார் .அவர் செதுக்க்கிருகும் அம்சவல்லி கதாபாத்திரம் இறுதி 15 நிமிடங்கள் கேட்கும் கேள்விகளுக்கு இந்த உலகத்தில் யாரிடமாவது பதில் இருக்கிறதா????????????????பாலா நீங்கள் இருக்கும் போதே கொஞ்சம் இயக்கம் என்றால் என்ன என்று இங்குள்ளவர்களுக்கு சொல்லி தாருங்கள் இல்லயென்றால் ,சக நடிகரை விரல் ஆட்டி கேலி பேசவும் மற்ற அசிங்கமான செயல்கள் செய்யவும் இந்த அற்புதமான துறையை பயன் படுத்திவிடுவார்கள். விருதிற்கு பூஜா,பாலா,இளையராஜா இடையில் கடும் போட்டி இருக்கும்,உலகத்தில் உள்ள விருதுகள் cannes,goldenglobe,bafta,oscar,என்று விருதுகள் அனைத்தையும் அள்ள இதோ புறப்பட்டுவிட்டது பாலா அண்ட் டீம்.
சுத்தமான தமிழில் சொல்ல வேண்டும் என்றால் “MINDBLOWING BALA” .
ஓவியர் ஜுலியன் பீவேர் இங்கிலாந்தின் புகழ்க் பெற்ற ஓவியர்,குறிப்பாக 3D ஓவியம் வரைவதில் மிகவும் புகழ் வாய்ந்தவர் ,சமீபத்தில் அவர் லண்டன் வீதிகளில் வரைந்த ஓவியம் அனைவரின் பாராட்டை பெற்றது அதிலிருந்து உங்களுக்காக……
தமிழனுக்கு !!!!!!!!
கடந்த நான்கு ஐந்து மாதங்களாக இலங்கையில் நடக்கும் போர் உச்சத்திற்கு வந்துள்ளது.தமிழ் நாட்டில் இருந்து 30km தொலைவில் உள்ள இலங்கையில் வாழும் ஒரு மாபெரும் தமிழ் சமுதாயத்திற்கு அங்கு வாழ உரிமை இல்லை,உரிமையோடு வாழ உரிமை இல்லை.அமெரிக்கா,ஆஸ்திரேலியா,லண்டன் பற்றி நிறைய பேசுவோம்,அருகில் உள்ள இலங்கையில் என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியாது.18 வருடங்களாக அங்கு, தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடி வரும் விடுதலை புலிகளுக்கும் அந்த நாட்டு ராணுவத்திற்கும் சண்டை நடை பெற்று வருகிறது.அந்த சண்டைக்கு காரணம் என்று கருதப்படுவது தமிழனின் உரிமை!!!!! உரிமை!!!! ,
இதுவரை 18000தமிழ் மக்கள் கொன்று குவிக்க பட்டுள்ளனர் தங்களது உரிமைக்காக.அங்கு (இலங்கையில்) எந்த அரசாங்கம் வந்தாலும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை தொடரவே செய்துள்ளது.அதனை எதிர்த்து போராடி வரும் தமிழ் மக்களுக்காக,தமிழ் நாட்டில் உள்ள மற்றும் உலகெல்லாம் பரந்து விரிந்துள்ள 8 கோடி தமிழர்கள் என்ன செய்துவிட்டோம்,அவர்களை நினைத்து பெருமையாக ஒரு ஐந்து நிமிடம் பேசுவோம்……..பிறகு…….அங்கு எதோ சண்டை நடக்கிறது என்று மற்ற இனத்தவர் நினைக்கலாம்….தமிழர்கள் அப்படி நினைத்தால்….அதை விட வேறு துரோகம் தமிழ் இனத்திற்கு நாம் செய்ய முடியாது .தமிழ் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள், சிலரை தவிர அனைவரும் கோடம்பாக்கத்திற்கு நடிக்க செல்லலாம்….அங்கு அவர்களுக்கு அருமையான எதிர்காலம் உண்டு.(ரஜினி,கமல்,விஜய்,அஜித்….கவனிக்க)’அவர்களை நம்பி இருந்த வரை போதும்.பதவி,பேராசை என்று இந்த நாடகம் நடத்தி கொண்டு இருக்கும் அரசியல்வாதிகளுக்காக வாக்களித்த நாம் தான் வெட்க பட வேண்டும்..நாம் தன் நம் இனத்திருக்கு என்ன கொடுமை நடக்கிறது என்று தெரிந்து குரல் கொடுக்க வேண்டும்.
திரை உலகத்தினர் உண்ணா விரதம்,வேலை நிறுத்தம் என்று செய்வது உங்கள் தமிழ் பற்றை வெளிப்படுத்துகிறது ஆனால் இலங்கையில் உங்கள் படம் ஓடுகிறது என்றும் ,தன் எதிர்கால அரசியலையும் மனதில் வைத்து இந்த போராட்டத்தை நடத்துவீர்கள் என்றால் அதை விட வேறு அவமானம் அங்குள்ள தமிழ் மக்களுக்கு தேடி தர முடியாது.நாம் எல்லா உணர்ச்சிகளையும் மனதில் வைத்துக்கொண்டு அவர்களுக்காக பாவ பட்டுக்கொண்டு இருப்பது அவர்களுக்கு தேவை இல்லை,அவர்களுக்கு தேவை குறைந்த பச்ச அமைதி.
தமிழக அரசியல்வாதிகளுக்கு கட்சி,சாதி,மதம் என்று பிரித்து இதற்கு தீர்வை தேடாதீர்கள்(அப்படி தேடுவீர்கள் ஆனால்)பிறக்கும் போது தமிழனாக பிறந்தோம்,தமிழ் பேசுகிறோம்,தமிழ் நாட்டில் வாழ்கிறோம் …..பிறகு வந்தது தன் கட்சி……..எல்லாம்…உங்களை நம்பி இருக்கும் அங்குள்ள மக்களை,அனைத்தையும் இழந்து இருக்கும் அவர்களுக்கு நாம் இருக்கிறோம் என்று தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை.உரக்க கேட்கட்டும் உங்கள் குரல்.உலக தமிழனின் குரல்.
அமெரிக்கா அரசாங்கத்தின் வெள்ளைமாளிகை வலைத்தளத்தினூடாக கோரிக்கை வைக்கும் முறை. இந்த வழியினூடாக 500 வசனங்களுக்கு மேற்படாமல் உங்கள் கோரிக்கையை வையுங்கள். மிகச்சின்ன ஒரு வசனமாகக்கூட இருக்கல்லாம் http://www.whitehouse.gov/contact/
உங்கள் புரட்சி உலகெங்கும்
கேட்கட்டும் தமிழ்
தமிழ் சினிமாவை வேறு தளத்திருக்கு எடுத்து போக கூடியவர்களில் முதன்மை இடம் பாலாவிற்கு சேரும்.சேதுவில் இப்படியும் தமிழ் சினிமா எடுக்க முடியும் என்று நிருபித்து,நந்தா,பிதாமகன் என்று அவரது படைப்புகள் அனைத்தும் தமிழ் ரசிகனை நிமிர்த்து உக்கார வைத்துஇருக்கிறது.ஒரு ரசிகனை ரசிக்க தெரிந்த படைபாளி தான் நல்ல கலையை கொடுக்க முடியும்,ஹாலிவுட் படம் போல் படம் எடுக்க எல்லோரும் முற்படும் போது பாலா தமிழ் திரைக்கு ஒரு விதிவிலக்குத்தான் .தமிழ் நாட்டை பொறுத்தவரை பிரமாண்டம் தேவை இல்லை, நல்ல உணர்வு பூர்வமாக படம் எடுத்தால் போதும்.நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலாவின் திரைப்படம் “நான் கடவுள்”திரைக்கு வர இருக்கிறது. அந்த படமும் நம் தமிழ் படங்களின் தரத்தை உலக அரங்கிற்கு எடுத்து செல்லும் என்று இப்பொழுதே அறுதியிட்டு கூற முடியும்.நாம் இங்கு எல்லோரும் ஹாலிவுட் படம் போல் எப்பொழுது இங்கு படம் வரும் என்ற எண்ணத்திற்கு செல்லாமல் தமிழ் படங்களை நல்ல உணர்வு பூர்வமான தமிழ் படங்களை முதலில் ஆதரிப்போம்.ஹாலிவுட் படங்கள் நம் அளவுகோல்கள் இல்லை,இதற்கு முன்பு வந்த தமிழ் படங்கள் தான் நமக்கு அளவுகோல்,அதற்கு “நான் கடவுள்” ஒரு முன்னோட்டமாக அமையும்.பாலாவிற்கு வாழ்த்துக்கள்..